பிள்ளையார், கணபதி,விநாயகர்
பிள்ளையார்
யானைத்தலை மனிதஉடலுற்று
யார்இந்தப்பிள்ளை என்று ஆனவர்.
அனாதிக்காலத்திற்கும் முற்ப்பட்ட காலகட்டத்தில் அண்டபேரண்டங்களிலிருந்து வந்திருந்த பதினெண்சித்தர்கள்,
பதினெட்டாம்படிக்கருப்புகள்,48வகைச்சித்தர்கள்,48 வகைவழிபடுநிலையினர்கள்,....முதலியவர்களால்
இம்மண்ணுலகில் நந்திதேவன் என்பவருடைய
மகனைக் கொண்டுஉருவாக்கப்பட்ட கடவுளரே
பிள்ளையார், கணபதி,விநாயகர் என்றமும்மூர்த்திகளாக
விளங்குகின்றனர்.
இவர்களுக்கானபடையல்பொருட்கள் காலத்திற்கேற்ப
மாறிவந்திருக்கின்றன
ஆரம்பக்காலத்தில் பழவகைகள் படைக்கப்பட்டன.
பின்னர்காலப்போக்கில் நாகரிக வளர்ச்சிக்கேற்பப்
பச்சரிசி,வெல்லம்,எள், ஏலக்காய், தேங்காய் கலந்த
காப்பரிசி (தங்களைக் காப்பாற்றுவதற்காக படைக்கப்படும்
படையல் என்பதால் இது காப்பரிசி என்று பெயர்ப்பெற்றது)
படைத்தனர்.
அதன்பிறகே வசதிவாய்ப்புக்களுக்கேற்ப
சுண்டல்(புழுக்கல்)
கொழுக்கட்டை
மாவிளக்கு, மற்றப் பணியாரங்கள் படைக்கும் மரபு தோன்றிற்று.
இவர் சிறந்த காத்தற் கடவுள் என்பதால் குட்டியும்,குனிந்தும்,
தொப்பைக்கரணமிட்டும்,
மிகுந்தபணிவோடு நிதானமாகக் கும்பிடவேண்டும் என்பது மரபு.
இது ஆதிசிவனாரின்பூசாமொழி வாசகங்களில் அருளப்பெற்றது.
சங்கட - துன்பங்கள்
அற - அற்றுப்போவதற்கு
சதுர்த்தி-நான்காவதுநாள்
சங்கடஅறசதுர்த்தி அன்றுசித்தர்கள் முறைப்படி படையலிட்டு
பிள்ளையாரை வணங்கினால் வாழ்வியல் துன்பங்கள் அகலும்.

Comments
Post a Comment